ஜென் கதைகள் மிகவும் பிரபலமானவை. பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் மேற்கோள் காட்டிப் பேசவும், எழுதவும் பெரிதும் ஜென் கதைகளையே தேர்வு செய்வர். இவர்களின் மேற்கோள்களிலிருந்து, ஜென் கதைகளின் நுட்பமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டோம் என, கூற முடியாது. மிகச் சிறந்த ஆன்மிக சிந்தனையாளரான, சத்குரு ஜென் கதைகளுடன் அதன் ஆழமான, உண்மையான உள்அர்த்தத்தையும் விளக்கிக் கூறியுள்ளவற்றைத் தொகுத்து, தயாரிக்கப்பட்டுள்ள நூல் இது. எழுத்து இரட்டையர்களான சுபாவின் எழுத்தாக்கத்தில், ஜென் கதைகளைப் பற்றிய மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.
ஜனகன்