தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என, முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும் போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது.
பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் மொழியைக் கெடுக்கிறது என, விளக்கியதோடு பல வேற்றுச் சொற்களுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் தந்துள்ளார் ஆசிரியர். தமிழ் மீது ஆர்வமும், அக்கறையும் கொண்டவர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
ஜவகர்