கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும்.
இந்த நூலில், ௨௬ கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, ‘அந்த மூன்று கத்திகள்’. அதிலேயே, உத்தங்க மகரிஷிக்கு, மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல; உலகோர் அனைவருக்கும் தான்.
பாண்டவரை அழிக்க, ஐந்து தங்க அம்புகளை தன் தவ வல்லமையால் தோற்றுவிக்கிறார் பீஷ்மர். அவற்றைப் பிடிவாதமாக பெறுகிற துரியன், அர்ச்சுனனிடமே ஏன் ஒப்படைக்கிறான் என்பதை விவரிக்கிறது ஒரு கதை. கண்ணனையே எதிர்த்து அர்ச்சுனன் போரிடத் துணிவது ஏன் என, எடுத்துரைக்கிறது இன்னொரு கதை.
நாராயண பட்டத்திரி, பக்த ஜனாபாய், ஞானேஸ்வர் கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
எழுத்தாளர் கவுதம நீலாம்பரன்