நூலாசிரியர் அ.கா.பெருமாள், தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான, பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன.
தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல இடங்களில் அவை, விளக்கமற்றவையாக உள்ளன. நாஞ்சில் நாடு என்பது ஓர் ஆளுகை பரப்பா அல்லது வாழ்விடமா என, குறிப்பிடப்படவில்லை. மிக முக்கியமான அதன் எல்லை பற்றிய ஆதாரங்கள் தரப்படவில்லை.
அமுதன்