வரலாற்றில் பல முக்கிய சம்பவங்களின் ரகசியங்கள் இன்னும் உடைக்கப்படவில்லை; பல கேள்விகளுக்கு, விடை கிடைக்கவில்லை. அவற்றில், 37 மர்ம முடிச்சுக்கள், இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நிலவில், ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தாரா; நெப்போலியன் எப்படி இறந்தார்; ஹிட்லரின் டைரி இருக்கிறதா; எவரெஸ்ட்டை முதலில் அடைந்தவர் யார்; அழியா காவியங்களை எழுதியவர் ஷேக்ஸ்பியர் தானா; ராபின் ஹூட் கற்பனை கதாபாத்திரமா என, இதுவரை நாம் ஏற்றுக்கொண்டிருந்த கருத்துகளை, இந்த புத்தகத்தின் மூலம் சந்தேகிக்க வைக்கிறார் ஆசிரியர்.
உலகின் மிக நீண்ட கல்லறை, சீன பெருஞ்சுவர்; 8 கி.மீ., துாரமுள்ள பனாமா கால்வாயில், தினமும் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை 15 ஆயிரம்; அங்கோர் பகுதியில் வாழ்ந்த, ‘கெமர்’ இனத்தினர் ஒட்டுமொத்தமாக காணாமல் போனார்கள்; பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் முந்தைய வம்சத்தினர் கருப்பர்கள் என்பது உள்ளிட்ட ஆச்சரிய தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுவாரஸ்யம் உள்ள வரலாற்று புத்தகம்.
கலா தம்பி