தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய நூல். மொத்தம், 53 விளையாட்டு முறைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கிட்டிபுள்ளு, உப்புக்கோடு, நொண்டி, ஆடுபுலி ஆட்டம், மெல்ல வந்து கிள்ளிப் போ, கிச்சுக்கிச்சு தாம்பளம், பல்லாங்குழி என, ஒவ்வொரு விளையாட்டுக்களின் பெயரை உச்சரிக்கும் போதே, மலரும் நினைவுகளில் மூழ்கி போகிறோம்.
இன்றைய தலைமுறைக்கு, இத்தகைய விளையாட்டுகள் பற்றி தெரிய வாய்ப்பில்லை எனும்போது, வேதனை ஏற்படுகிறது.
கணினி விளையாட்டுக்குள் தொலைந்து, சிறு வயதிலேயே கண்ணாடி அணிந்து, தொப்பை விழுந்து, மருந்துக்குள் வாழ்க்கை நடத்தும் இன்றைய தலைமுறைக்கு, ஆரோக்கியம், கவனம், ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும், நம் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தை, இப்புத்தகம் தோற்றுவிக்கிறது.
குழு விளையாட்டுக்களில், அணி பிரிக்கும் வழிவகையான, உத்திப்பிரித்தல்; யார் விளையாட்டை துவங்க வேண்டும் என்பதற்கான, ‘சாட் பூட் த்ரீ’ பற்றியும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலா தம்பி