இந்த நூலில், 18 பர்வங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பர்வத்தின் பொருளடக்கமும் நூலின் முன் பகுதியில் இருப்பதால், நமக்குத் தேவையான பகுதியை மட்டும் படித்து அறியமுடிகிறது.
சூரியனின் தேரோட்டி அருணனின் பெருமையும் (பக். 41), கவுரவர் நூறு பேரின் பெயர்கள் (பக். 77), சகுந்தலையின் கதை (பக். 101), அறுவகை வாரிசுகளின் பெயர்கள் (பக். 147), ஜராசந்தன் கதை (பக். 286), யட்சனின் கேள்விகளுக்குத் தருமர் கூறும் விடைகள் (பக். 507), நான்கு யுகங்களைப் பற்றிய செய்திகள் (பக். 457), அர்ஜுனனின் 10 மறு பெயர்களுக்கும் உரிய விளக்கம் (பக். 549), அஞ்சலிகா வேதத்தின் பொருள் (பக். 767), பெண்கள் மனத்தில் ரகசியம் தங்காமல் போக, தருமர் இட்ட சாபம் (பக். 1012), பீஷ்மர், தருமர்க்குக் கூறும் அரசாட்சி குறித்த நீதிகள் (பக். 1027 – --1061) முதலியன படிக்கச் சுவையாக இருக்கின்றன.
டாக்டர் கலியன் சம்பத்து.