காஞ்சி பெரியவரின் உபதேசத்தோடு, மலர் துவங்குகிறது. வடமொழியில் உள்ள ஹிதோபதேசம் என்ற நூலில் உள்ள நல்லுரைகள், அவற்றோடு ஒப்பிடத் தக்க தமிழ் இலக்கியங்கள், வி.என்.ஜானகி பற்றிய கட்டுரை, வேத அங்கங்கள் பற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரை, சாருகேசியின்,
‘வாரத்துக்கு ஒரு புத்தகம் படிக்கும் பில்கேட்ஸ்’ கட்டுரை, அயோத்தி, மதுரா தலயாத்திரை, ஜோத்பூர் சுற்றுலா என, பல சுவாரசியமான செய்திகளையும், தகவல்களையும் உள்ளடக்கி இருக்கிறது. பாஞ்சாலி சபதத்தில், தருமனை பாரதி எப்படி செதுக்கி உள்ளார் என்பதை பற்றிய கட்டுரை, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் பற்றிய நினைவு கட்டுரை, இவை தவிர பல சிறுகதைகள் என, பல்சுவை இதழாக மலர்ந்துள்ளது, லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர்.
மைதிலி