தமிழ் இலக்கிய வரலாற்றில், இடதுசாரி சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, தன் பார்வையை சிறுகதைகளாக செதுக்கியவர்களில் பி.டி.சிரிலும் ஒருவர். வேந்தன் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மனிதநேயத்துடன் சாதாரண மனிதர்களை பற்றியும், தன்னை சுற்றிய நிகழ்வுகளையும் கதைக் கருவாக கொண்டு எழுதியுள்ளார்.
சாதாரண நிகழ்வும், அன்றாட வாழ்க்கையின் பாதிப்பும் அற்புதமான கதைகளாக நம்முன் உருவெடுத்து நிற்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வையும், உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் பிரச்னைகளையும், எளிமையாக கூறுகிறது. இருப்போருக்கும் இல்லாதோருக்குமான போராட்டத்தை, தனக்குரிய ரசனையில் விவரித்துள்ளார்.
ஜே.பி.,