பெர்ஷியாவிலிருந்து கஜினி படையெடுத்து வந்து, காசி நகரத்தை அழித்த போது, அவருடன் வந்த அமைச்சர்களில் ஒருவரான அல்பெரூனி, அந்த நகரத்திலேயே தங்கிவிட்டார். அந்த நகரில் ஒரு மசூதி எழுப்பி, முஸ்லிம்கள் வழிபட வழி செய்ய விரும்பினார். அதை, ௧௦௧௯ம் ஆண்டு, தமது குறிப்பில் எழுதியிருக்கிறார். இப்படி காலங்காலமாக எல்லா மதத்தவரையும் தம்மை நோக்கி பயணிக்க வைத்த கங்கைக் கரை தான், சித்தார்த்தன் புத்தராகும் முன், வந்து தங்கிய முதல் இடம்.
பயண, வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமல்ல, அனைவருக்கும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. புறப்படுவதற்கு முன் இந்த நூலை வாசித்து விட்டுச் செல்லலாம். நூலில் இடம் பெற்றிருக்கும் வண்ண புகைப்படங்கள், காசி, கங்கையை நம் கண் முன் கொண்டு வருகின்றன. இடையிடையே, ஜக்கி வாசுதேவின் கேள்வி, பதில்கள் இடம் பெற்றுள்ளன.
ஒரு பயண நூல் வாசிக்கும்போது, வாசகனுக்குள்ளும் பயண உணர்வைக் கொண்டு வருவது சவாலான விஷயம். அதை அற்புதமாக செய்திருக்கிறார் நூலாசிரியர்.
கீதா