இதயத்தைத் துரிதகதியில் இயங்க வைக்கும் மர்ம நாவல்! ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும்! வசீகரமான ஆங்கில நடை. மதுரா கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில். ‘திபெத் லிபரேஷன் பிரன்ட்’ என்ற ரகசிய அமைப்பைச் சேர்ந்த டென்சிங், கிருஷ்ணர் கோவிலில் உள்ள, சியமந்தக மணியை திருட வருகிறான். கோஹினூர் வைரம் போன்ற விலை மதிக்க முடியாத கல் அது; நீல நிறம் கொண்டது. திருடும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருக்கும் போது, ஒரு மர்ம மனிதனால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.
அன்றே கோவில் வளாகத்தில், உலகளாவிய அனைத்து மதகுருமார்களின் மாநாடு நடக்கிறது. அதில் தலைமை வகித்து பேச வந்த துறவியும் கொல்லப்படுகிறார். சிங்கப்பூர் 7th சேனல் டிவி நிருபர், சங்கீதா ராவ், ஆலன் டேவிஸ் என்ற வெல்ஷ் என்ற ஆங்கிலேயன், ஆன்டன் ப்ளான்சார்ட் என்ற பிரெஞ்சுக்காரன், இவர்கள் மூவரும், சியமந்தக மணியைத் தேடி, மர்மப் புதையல் காண பாடுபடுகின்றனர்.
அந்த விலை மதிப்பற்ற கல் கிடைத்ததா என்பதை சுவை குன்றாமல் விறுவிறுப்புடன் சொல்கிறார் நூலாசிரியர். சங்கீதா ராவ், ஆலன் டேவிஸ் காதல் கதையும் ஒரு போனஸ் இணைப்பு.
எஸ்.குரு