ஸ்ரீமத் ராமானுஜரின், 1,000வது ஆண்டில் அவரைப் பற்றி பலரும் நூல் எழுதுகின்றனர். இந்நூல் அவ்வரிசையில் வந்துள்ள போதிலும், சற்று மாறுபட்ட சிந்தனைகளுடன் வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமானுஜர் தன் மனைவியைத் துறந்தது நியாயமா என்று ஆய்வு செய்கிறார்.
படிக்கச் சுவையாக உள்ளது.
இந்நூலில், 11 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் இடையில் பெட்டிச் செய்திகள் பல, புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் விதிஷா நகருக்கு அருகேயுள்ள கருடன் தூண் (பக்.112).
சரணாகதி என்றால் என்ன? என்றும் (பக்.25), ஸ்ரீராமானுஜர் அருளிய நூல்களின் விவரமும் (பக்.40), ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகளின் விளக்கமும் (பக்.48), தீண்டாமையை ஏற்காதவர்களில் ஸ்ரீராமானுஜர் செய்த பணி (பக்.92), ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் நிர்வாகம் (பக்.117), ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஒரு வகை கஷாயம் இன்று வரை படைக்கப்படுவதன் ரகசியம் (பக்.18) ஆகியன, நூலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.
நூலாசிரியரின் எளிய, இனிய எழுத்து நடை, படிப்போருக்கு இன்பம் தரும் என்பதில் ஐயமில்லை.
டாக்டர் கலியன்சம்பத்து