திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக்கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தலைவர் கருணாநிதியின், 60 சட்ட சபை பணி என்ற மூன்று முக்கிய அம்சங்களை சுருக்கமாக அலசும் புத்தகம். தமிழ் நாளிதழ், ‘தி இந்து’வின் அங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணகாந்தி, சோஷலிச தத்துவவாதி யோகேந்திர யாதவ் உட்பட பலர் எழுதிய கருத்துக்களை இந்த நூல் சித்தரிக்கிறது.
பிரதமராக பதவியேற்க, வலியுறுத்தியவர்களிடம் கருணாநிதி தெரிவித்த கருத்தை முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், தி.மு.க.,வின் முன்னோடிகள் அணுகுமுறைகளை, தி.மு.க.,வின் புதிய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்ற யோகேந்திர யாதவ் கருத்தும் வெளிப்படையானவை.
கருணாநிதியுடன் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் கட்சியின் இரண்டாம் இடத்தில் உள்ள தலைவர் அன்பழகன், ‘கட்சி, ஆட்சி, அதிகாரம் இல்லை; தமிழ், தமிழர் நலன் எங்கள் இணைப்புச் சங்கிலி’ என்று குறிப்பிட்டு, பிரிய முடியாத பந்தத்தை விளக்கியிருக்கிறார்.
கருணாநிதியின் அபார உழைப்பைக் காட்டும் முயற்சியாக வந்த இந்த நூல், திராவிட இயக்கத்தினரின் பிராமண எதிர்ப்பையும், இன்றைய நவீனத்துவ நடைமுறைகளின், ஆதிக்கம் அதிகம் வளர்ந்த காலத்தில் படம் பிடித்திருக்கிறது. வாசிப்பிற்கு ஏற்ற நூல்.