விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை தினமும் படித்தால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் அகவல் தமிழில் இருந்தாலும், அதை புரிந்து கொள்வது கடினம்.
யோக அடிப்படையில், விநாயகரை பற்றி அவ்வை பாடியுள்ளார். அந்த வகையில், விநாயகர் அகவலுக்கு இந்நுாலில் சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் படிப்பவர்கள், இந்நுாலை படித்தால், விளக்கம் அறிந்து சிறப்பாக பாராயணம் செய்ய முடியும்.