திரைப்பட இயக்குனர் லிங்கு சாமியின் அய்க்கூ கவிதைகளுக்கு அய்யப்ப மாதவன் அழகான விரிவுரைகள் தருகிறார். கவிதை... ‘இன்று நான் காக்கைக்கு வீசிய அரிசி பாரதி விதைத்தது...’ அய்யப்பா மாதவனின் விளக்கவுரை: பாரதி இரக்க சுபாவமுள்ளவன். வீட்டில் சமையலுக்கு இருந்த அரிசியை கூட வீட்டிற்கு வந்த பறவைகளுக்கு அள்ளி இறைத்தவன். உயிர்களுக்கு இரங்கும் குணம் எல்லாரிடமும் இருப்பது இல்லை. ஆனால், கவிஞனுக்கு நிறையவே இருக்கும் என்பதை இது உணர்த்துகிறது. –எஸ்.குரு