பிருந்தாவன் யாத்திரை, வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி இந்துக்கள் எல்லாருக்குமே ஒரு மகா புண்ணிய தலமாகும்.
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலை வர் சுவாமி கமலாத்மானந்தர் அங்கு தங்கி, தான் சென்று வந்த இடங்கள் குறித்தும், பிருந்தாவன் குறித்து இதுவரை வெளியில் வராத விஷயங்கள் குறித்தும் இந்த நுாலில் அழகாக தொகுத்து தந்திருக்கிறார்.
பகவான் கிருஷ்ணர் தொடர்புடைய இடங்களில் பிருந்தாவன் குறிப்பிடத்தக்கதாகும். கார்த்தியாயினி பீடம், கோபேஸ்வரர் சிவன் கோவில் உட்பட ஏராளமான இடங்கள் உள்ளன.
அவற்றை பார்க்க வேண்டுமானால், 25 நாட்கள் தங்க வேண்டியிருக்கும். சுவாமி கமலாத்மானந்தர் அங்கு சென்ற போது, கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளை விடாமல் இந்த நுாலில் தந்துள்ளது அருமை.
இந்நுாலில், கிருஷ்ணர் அவதரித்த இடம் உள்ளிட்டவை குறித்தும் படங்களுடன் வெளியிட்டிருப்பது பாராட்டுக்கு உரியது.
– மேஷ்பா