சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து நீதிக் கதைகள் நான்காம் தொகுப்பை எழுதியிருக்கிறார், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர். எத்தனையோ நீதிக் கதைகளை படித்திருந்தாலும், இதில் உள்ள நீதிக் கதைகளை படிக்கும் போது, நமக்கு அந்தளவுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது உறுதி.
நீதிக் கதைகள் ஒவ்வொன்றையும் படிக்க அலுப்பு தட்டாத வகையில் தொகுத்து தந்துள்ளார். மகாபலிக்கு மகாலட்சுமி கட்டிய ரக் ஷை கயிறு, திருவிளையாடற்புராணத்தில் வரகுண பாண்டியனின் சிவபக்தி, புத்தரின் புலனடக்கம், ராம நாமத்தின் மகிமை என, அனைத்து கதைகளும் முத்துக்களாக அமைந்துள்ளன.
ஒவ்வொரு கதைக்கும் ஏற்ப ஓவியர், ஆர்.சேகரின் ஓவியங்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. படிக்க மட்டுமின்றி, பரிசளிக்கவும் ஏற்ற நுால் இது.
- மேஷ்பா