இன்று வரை, வள்ளுவர் வான் குறளுக்கு உரை வகுத்த பெருமக்களில் முதன்மை இடம் பரிமேலழகருக்கே உரியது.
துல்லியத் தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ் நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடி மரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகர் உரை.
மற்றைய உரையாசிரியர்களிடம் காண முடியாத சில சிறப்புகள் பரிமேலழகரிடம் உண்டு.
மூல நுாலை வேர் நுனி முதல், உச்சித் துளிர் முனை வரை ஒரு முழுமையாகப் பார்க்கும் விரிந்த பார்வை இவருடையது.
இப்போது, ‘பாமரருக்கும் பரிமேலழகர்’ என்ற எளிய உரை, அதைத் திட்பமாக படம் பிடிக்கிறது. இயல்பாக மீண்டும் ஒரு பரிமேலழகர் நேரில் நம் காலத்துக்கு வந்து உரையாடுவது போல் இருப்பது சிறப்பு.