உடல்நலம், மனநலம், சமுதாய நலம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கருத்தாக மருத்துவத்தை எளிதாக புரிய உதவிடும் நுால். ஆசிரியர் அசோக், ஆங்கிலம் மற்றும் சித்த மருத்துவத்தில் நல்ல பரிச்சயம் கொண்டவர். அகில இந்திய வானொலியில் இவர் தினசரி உரையாற்றிய தொகுப்பை இந்த நுால் கொண்டிருக்கிறது.
சர்க்கரை வியாதி இப்போது புதிதாக சமுதாயத்தை மிரட்டும் நோய். அதை சமாளிக்க நார்ச்சத்துணவை வலியுறுத்தும் பலரும் எது நார்ச்சத்து உணவு என்று பட்டியலை உருவாக்க சிரமப்படலாம். பீன்ஸ், காளான், சோயா, வெங்காயத்தாள் என்று அடுக்கும் ஆசிரியர், ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். பலரும் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடும் ரசிகர்களாக மாறிவருகின்றனர். ஓட்ஸை விட நம்ம ஊர் வரகு, கேப்பை, சோளம் சிறப்பானது என்கிறார். இப்படிப் பல தகவல்கள் கொண்ட நுால்.