நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.
தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் நுாற்றாண்டின் நிகழ்வுகளாகக் கற்பனையில் வழங்கியிருப்பதும் புனைகதைத் திறனுக்குச் சான்றாக அமைகிறது.
– முகிலை ராசபாண்டியன்