இந்நுாலில், ‘10 ரூபாய் பெறாத சிலை ஒன்றை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கலைப்பொருள் ஆர்வலர் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் உழவன்.
‘விலை மதிக்க முடியாத இந்த செப்புச் சிலையை வெறும், 10 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்த உழவன் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் கலைப்பொருள் ஆர்வலர் என, ஒரு கதை தெரிவிக்கிறது.
இரு வேறு மனநிலையை சிறுவர்களின் மனதில் பதிய வைக்கும் வகையில், இந்த கதை அமைந்துள்ளது. இதை போன்ற, 35 நீதிக் கதைகள் அடங்கிய நுால் இது.
இருபத்தோராம் நுாற்றாண்டில் நீதி, நேர்மை நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ள ஆசிரியர் கமலாத்மானந்தருக்கு பாராட்டு.
–
முகிலை ராசபாண்டியன்