சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது.
தலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் கூறு குன்றாமல் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பக்கத்துக்கு ஒரு பாடலோடு ஆங்கில மொழியாக்கம் வழங்கப்பட்டுள்ளது. பாட்டின் தெளிவுக்கு உதவும் குறிப்புகளும் தந்திருப்பது சிறப்பு. பிற்சேர்க்கையாக பாடல்களின் களங்களும், குறிப்பு நுால் விபரங்களும் தரப்பட்டுள்ளன.
– மெய்ஞானி பிரபாகரபாபு