ஆளுமைகளின் பேட்டி சுவாரசியம் மட்டும் தருவதில்லை; வினோத கோணங்களில், அறிவை திறந்து விடும் வல்லமையுள்ளது. அத்தகைய ஆக்கங்கள் நிறைந்த நுால்.
பிரபல பத்திரிகையாளர், வேறுபட்ட கால பின்புலத்தில், ஆளுமைகளுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தன் முதல், பாரதியின் கொள்ளுப் பேத்தி வரை, தமிழக சமூக வரலாற்றில் மாறுபட்ட முகங்களையும், அகக்காட்சிகளையும் காட்டுகிறது.
முன்னுரை தவிர, 21 தலைப்புகளில் கட்டுரைகள் மற்றும் பத்திகள் இடம்பெற்று உள்ளன. தமிழ் மொழி, இலக்கியம், சமூகநிலை, கல்வி, ஆய்வுகள் என பல்வேறு வகைப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளது.
அந்தந்த காலக்கட்டத்தின் சிந்தனை போக்கில் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. சாதாரண மோதல் போக்குடன் முடிந்து விடாமல், வளர்ச்சி நோக்கிய பாதையில் அமைந்துள்ளது. தமிழ் சமூகத்தின் ஒரு காலக்கட்டத்தை வெளிப்படுத்தும் நுால்.