பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘குடும்ப விளக்கு மற்றும் அழகின் சிரிப்பு’ ஆகிய நுால்களின் மூலக்கவிதைகளுடன், புரியும் வகையிலான உரையும் எழுதி பதிப்பிக்கப்பட்டுள்ளது. அழகிய துணைத் தலைப்புகள் அமைந்து மூலப்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன; அவற்றுக்கு அடியில் பொருளுரை எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து சொற்களுக்கு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
பாவேந்தரின் பாக்களை சுவைப்பதுடன், அவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள உரையுடன் அமைந்த நுால். எளிய நடையில் உள்ளது. மூலத்தை கண்முன் நிறுத்தும் வகையில் உரை அமைந்துள்ளது. அது எளிய சிறுகதை படிப்பது போல் உள்ளது. பாவேந்தர் கவிதைக்கு உரை எழுதியுள்ளது சிறந்த முயற்சி.