பெயரில் உள்ள சுவாமி என்னும் சொல், உலக வாழ்வியலைத் துறந்தவர் என்பதைக் குறிக்கும். விவேகானந்தன் என்பது, பகுத்தறிவால் பிறக்கும் ஆனந்தம் என்று பொருள் கொள்ளும். இப்படி பெயருக்கான விளக்கத்தை விவேகானந்தரே உணர்த்தியுள்ளார்.
தன் போதனைகள் மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவானவை என்ற எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். பிறருக்கு சுதந்திரம் வழங்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்கு தகுதி இல்லை என்று இந்திய மக்கள் நிலையை உணர்த்தியுள்ளார்.
வேத ரகசியத்தை அறிந்தவர் குரு அல்ல. புத்தகப் பூச்சியும் குரு அல்ல. பண்டிதர்கள் குரு அல்ல. உண்மைப் பொருள் உணர்ந்தவரே குரு என எடுத்துரைத்துள்ளார். விவேகானந்தரின் வாழ்க்கை, அவரது குரு, பயணம், போதனை தொடர்பாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மாறுபட்ட முறையில் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்