வாய் சொல்லில் வீரர், யாருக்கு உதவக்கூடாது, சொந்த காலில் நிற்பது, கடல் கடந்து பொருள் ஈட்டுவதன் தேவை, யாரை எதற்கு மதிக்க வேண்டும், வெற்றி எப்போது கைகூடும், பெரியோர்களின் ஆலோசனை ஏன் அவசியம், நம் பலம், பலவீனம் எது, சேவல், கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை போன்ற வாழ்வியல் அடிப்படையை விவரிக்கிறது இந்த நுால்.
எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நான் அறிவாளி; உலகில் எந்த கொடூரமானவனும், ஒரே நாளில் அப்படி ஆகிவிடுவதில்லை; சண்டை போட்டுக்கொள்ள இருவர் வேண்டும். அதை முடிவுக்கு கொண்டு வர ஒருவர் போதும்; காலையில் ஒரு மணி நேரத்தை தவறவிட்டால், நாள் முழுதும் அதைத் தான் தேடிக் கொண்டிருப்பர்.
விருந்தோம்பல் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட அன்பு போன்றது. இந்த தத்துவம் எதற்காக கூறப்பட்டது என்பதை விளக்குகிறார். சவாலை ஏற்று, வெற்றி வாகை சூட நினைக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய வழிகாட்டி நுால்.
– டி.எஸ்.ராயன்