திருக்குறளை அறநுால், தத்துவ நுால் என வரையறை செய்தாலும், முழுமையை வார்த்தைகளால் அளவிட முடியாது. மக்கள் வாழ்வு முழுதையும் நுணுகி அறிந்து, ஆராய்ந்து உணர்ந்து திருக்குறளைப் படைத்துள்ளார்.
மக்கள் வாழ்வியலையும் நுண்மாண் நுழைபுலத்தால் ஆழ்ந்து உணர்ந்ததால் தான், ஓர் உலகப் பொதுமறையைப் படைக்க முடிந்தது. ஒவ்வொரு குறளும் ஏழு சீர்களைக் கொண்டமைந்துள்ள நிலையில் பல உரையாசிரியர்கள் பலவிதமான விளக்கங்கள், பொழிப்புரைகள், கருத்துரைகள் எனப் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள நிலையில் ஏழு வார்த்தைகளிலேயே விளக்கத்தை எளிய தமிழில் வழங்கியிருப்பது சாலச்சிறந்தது.
பழந்தமிழ்க் கல்விக் கொள்கை நிலையிலிருந்து, அறிவுத்தெளிவு, ஒழுக்க உயர்வு என்று வள்ளுவர் வகுத்த முந்நிலைக் கல்விக் கொள்கையை ஏற்கும் தன்மையில் பயனுள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்