ஏழு கதைகளைத் தந்து இவை சினிமா படம் எடுக்க ஏற்றவை என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார். இதில் ஏற்கனவே வந்த படங்களின் சாயல் இல்லாத வித்தியாசமான கதை, நீ தான் மனிதன்!
ஜீவா, ரஷ்ய நாட்டில் கல்லுாரியில் படித்துக் கொண்டிருக்கிறான். இதுவரை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களைப் பார்த்தது இல்லை. இந்தியாவில் வாழும் பிச்சைக்காரர்களைப் பற்றி புத்தகத்தில் படித்து விட்டு வருத்தப்படுகிறான். இந்தியா வந்து ஏழைகளை பார்க்கிறான்.
ஒரு பெரிய தொழிற்சாலை ஆரம்பித்து அதிலே ஏழைப் பிச்சைக்காரர்களுக்கெல்லாம் வேலை கொடுத்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க போவதாக சொல்கிறான். சொன்னபடியே செய்கிறான்.
சொத்துக்களை விற்று, தொழிற்சாலைகளை துவங்குகிறான். ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், லண்டன், அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் கோடிக்கணக்கான டாலர்கள் இலவசமாக அளிக்கின்றன.
– எஸ்.குரு