பொதிகை மலையின் இயற்கை எழிலையும், அங்கு வாழும் காணிகள் என்னும் பழங்குடியினரின் வாழ்வு, உணவு முறை, கல்வி, காதல், நேர்மை ஆகிய நற்பண்புகளையும் பேசும் புதினம். இயற்கையை தமிழர் கடவுளாகப் போற்றிக் காத்தனர். அதன் குறியீடாக சொரிமுத்து ஐயனார், சங்கிலி கருப்பன், பிரம்ம ராட்சசி அம்மன், வனப்பேச்சி அம்மன் ஆகிய தெய்வங்களை முன்னிறுத்தி வழிபட்டனர் என்பதை கதை காட்டுகிறது.
தெய்வ சக்திக்கே சவால் விடும் தீயசக்திகள் மனித வடிவில் வந்து, காட்டையும், வீட்டையும் அழிக்கின்றன. முடிவில் நம்பிக்கைக்கு உரிய தெய்வ சக்திகள் வந்து, தீய சக்திகளை விரட்டி மக்களையும், மலை வளத்தையும், காப்பாற்றுவதே கதையின் கருவாகும். பொதிகை மலையில் வாழும் காணிகள் என்னும் பழங்குடியினரின், மிக உயர்ந்த குணங்களைக் காட்டுகிறது.
–- முனைவர் மா.கி.ரமணன்