புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் அன்னையை வியந்து, புகழ்ந்து எழுதப்பட்டுள்ள நெடுங்கவிதைகளின் தொகுப்பு நுால். புதுச்சேரியில் ஆசிரமம் அமைத்து, அற்புதங்கள் நிகழ்த்திய அரவிந்தர் அன்னையின் புனிதம் நிறைந்த வாழ்வும், அருள் நிறைந்த வாக்கு பற்றியும் நெகிழ்ந்து இனிய கவிதைகளாக புனைந்து, வியப்பை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
மொழி வாழ்த்து, உலக வாழ்த்துடன் துவங்குகிறது புத்தகம். முதல் பகுதியில், புவி போற்றும் புனிதர்கள் என்ற தலைப்பில், எளிய கவிதைகள் வரையப்பட்டுள்ளன. பக்கத்துக்கு பக்கம் அழகிய படங்களும் உள்ளன.
அரவிந்தருடன் அன்னையின் காட்சி மற்றும் அன்னையின் வாழ்க்கையில், முக்கிய பருவங்களில் எடுத்த படங்கள், உரிய இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. அரவிந்தர் அன்னையின் வெற்றி வாழ்க்கையை, எளிய கவிதை வடிவில் மனதில் பதிய வைக்கிறது. கவிதைக்கான சொற்கள் மிக கவனமுடன் கோர்க்கப்பட்டுள்ளன. ஒரு புனித வாழ்க்கையை நெகிழ்ந்து போற்றும் வகையில், உருக்கமுடன் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– ஒளி