தமிழ் திரையுலகில், ஐம்பது, அறுபதுகளில் நடந்த சம்பவங்கள், நடிகர், நடிகை, இயக்குனர்களின் உண்மை முகங்களை வெளிக்கொண்டு வரும் நுால். இயக்குனர்கள் வளர்ச்சி அடைந்த பின் ஏற்படும் மன மாற்றம், நடிகையரை அணுகும் விதம், ஓரிரு படத்தில் நடித்த பின் நடிகர்கள் காட்டும் பந்தா போன்ற திரைத்துறை குணங்களை விவரிக்கிறார் நுாலாசிரியர்.
ஓடியாடி உதவி செய்ய உதவியாளர் வைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை பார்த்து தனக்கும் உதவியாளர் கேட்ட நடிகை பானுமதி, நாங்கள் என்ன குறைந்தவர்களா என, இயக்குனர்களும் அவர்கள் பங்குக்கு உதவியாளர் வைத்து, உச்சங்கள் சுகமாக வாழ்ந்த அனுபவத்தை, விலாவாரியாக சொல்கிறார்.
திரைப்பட கருத்துகளில், ஜாதி, மதம் கலப்பு, தணிக்கைத் துறை நுழைந்த சூழல் குறித்தும் அலசுகிறார். கிழக்கு கடற்கரை சாலைக்கும், திரைத்துறைக்கும் உள்ள தொடர்பு, படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். திரைத்துறையில் பணிபுரிபவர்கள், சினிமாவில் சேர ஆசைப்படுவோர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்