வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பரின் வாழ்க்கை அனுபவம் மற்றும் அவரது வரலாற்று அணுகுமுறையை அறிமுகம் செய்யும் நுால். எளிய நடையில் கதை போல் எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என, மூன்று பகுதிகளாக உள்ளது.
ஒவ்வொரு தலைப்பும், பல உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. முதல் பகுதியில், ஆத்திகமா நாத்திகமா, புதிய இந்தியா புதிய கனவுகள், அடையாளமும் அதற்கு அப்பாலும், விரியும் உலகம் என, ரசனையுடன் தலைப்பிட்டு தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
வரலாறு என்ற தலைப்பில், இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை, மூன்று இந்தியர்கள், இந்தியாவை ஆராய்வது எப்படி, வரலாறு எழுதுவது எப்படி போன்ற கேள்வி சார்ந்து தகவல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இறுதிப் பகுதியில், ரொமிலா தாப்பருடன் நடத்திய உரயைாடல், கேள்வி – பதில் பாணியில் இடம் பெற்றுள்ளது. மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியரின் வாழ்க்கை மற்றும் பணி அனுபவங்களை புரியும் வகையில் தந்துள்ள நுால்.
– அமுதன்