மன்னர் அசோகரின் வாழ்வையும், அவர் வாழ்ந்த காலச் சூழலையும் அறிமுகப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. புத்தகத்தில் 25 தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. கல்வெட்டு குறிப்புகள், கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் பற்றிய விபரம் மற்றும் சான்றாதாரங்கள் பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளன. புத்தகத்தின் சிறப்பே, வரலாற்று பூர்வ தகவல்களை எளிய வடிவில் தந்துள்ளது தான்.
பண்டை காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதும் பதிவாகியுள்ளது. கற்பனையான தகவல்களை நீக்கி, ஆதாரப்பூர்வமாக திரட்டப்பட்ட செய்திகளே நுால் முழுதும் உள்ளது. வரலாற்றில் அசோகருக்கு தனி இடம் உள்ளது. அந்த இடத்தை புரிந்து கொள்ள வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த நுால்.
– பாவெல்