வலை வர்த்தக நிறுவனத்தின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள நாவல். உமா நளினி, ஜோதிப் ஆகியோர் முக்கியமான கதை பாத்திரங்கள், திருமணமானவர்கள். பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளும் உண்டு. ஜோதிப் மனைவி அஸ்வினி. உமா நளினியோ விதவை.
அழகி உமா நளினியிடம் ஒருதலைக் காதல் கொள்கிறான் ஜோதிப். அலுவலகத்தில் இருவரும் ஒன்றாகப் பணியாற்றுகின்றனர். கதை பெரும்பாலும் அலுவலக அறையில் தான் நிகழ்கிறது. கதைப்பின்னல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிகழ்கிறது. கதையின் பெரும்பாலான நேரம் இவ்விருவரின் அலைபேசி உரையாடலிலேயே கழிகிறது.
திருமணமான ஜோதிப் இறுதி வரை அவளை மறப்பதாகத் தெரியவில்லை. இதனால் மனைவியுடன் போராட்டம் நடக்கிறது. விவாகரத்து கோருமளவுக்குச் செல்கிறாள். கதை இறுதியில், உமா நளினி எத்தகைய இழிவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாள் என்பது ஒரு குறும்படத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மோகத்தில் ஆழ்ந்திருந்த ஜோதிப்புக்கு உண்மை தெரிகிறது. மனைவியிடம் மன்னிப்பு கேட்பதோடு முடிகிறது.
– ராம.குருநாதன்