சுந்தர காண்டம் படிப்பவருக்கு துன்பங்கள் தீரும், திருமணம் கைகூடும், எடுத்த முயற்சி வெற்றி தரும் என்ற நம்பிக்கையை உறுதி செய்யும் நுால். மகாபாரதத்திற்கு ஒரு பகவத் கீதை; அதுபோல் ராமாயணத்திற்கு ஒரு சுந்தர காண்டம் என நிரூபிக்கிறார்.
வானில் அனுமன் பறக்கும் விந்தை, காவல் தெய்வம் இலங்காதேவியை அனுமன் வீழ்த்தியது, திரிசடை சீதைக்கு கூறிய ஆறுதல், கணையாழியைத் தந்து சூளாமணியைப் பெற்ற அனுமனின் ஆனந்தம், காக்கைக்கு ஒரு கண் வந்த கதை, இலங்கையை எரித்தது, ராமனிடம் சூளாமணி தந்தது போன்ற நிகழ்வுகளை அழகுடன் வழங்கியுள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்