துாதுவர்களாக, வணிகர்களாக, உளவாளிகளாக, சாகசவாதிகளாக இந்தியா வந்த அயல்நாட்டுப் பயணியர் தந்துள்ள குறிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். இந்தியா என்ற பெயரை அறிமுகம் செய்தது கிரேக்கர் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிந்து – ஹிண்டு – இண்டஸ் – இண்டியா எனப் பெயர் பரிணாமம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மர்மோட்’ என்ற அணிலை, எறும்பு என குறிப்பிட்டு, அது பாலைவன மண்ணைத் தோண்டிப் போடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் இருந்த தங்கத்தை, அந்தக் கால இந்தியர்கள் பைகளில் அள்ளி, ஒட்டகத்தில் எடுத்துச் சென்றனர் என்ற குறிப்பு உள்ளது. ஹொரோடோட்டஸ் எழுதியுள்ளவற்றை எல்லாம் கற்பனை என்று மற்றொரு கிரேக்க எழுத்தாளர் தீஷியஸ் எழுதியதாக கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
வரலாற்றைச் சொல்கிறதா, கற்பனையை விவரிக்கிறதா என்னும் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்ற தெளிவைக் கொடுக்கிறது இந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்