தமிழர் வாழ்வில் கண்ட பல்வேறு மருத்துவச் சிந்தனைகளை உள்ளடக்கிய, 63 கட்டுரைகளின் தொகுப்பு நுால். நோய் கூறுகள், நோய் தீர்க்கும் மருந்துகள், நோய் குறிப்புகள், மருத்துவ முறைகள், அகப்புற மருத்துவம், மலர் மருத்துவம், இயற்கை மருத்துவம், நாட்டுப்புற மருத்துவம், யோக மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவப் பயன்கள், நோயற்ற பெருவாழ்வு முதலான சிந்தனைகளை, தமிழ் இலக்கியத்தின் வழி எடுத்துரைக்கிறது.
மருந்தாகும் மீன்கள், அறிவியல் கண்ணோட்டத்தோடு ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டு உள்ளது. வள்ளலார் கண்ட பசிப்பிணி அறுத்தல் பற்றிய செய்தியை ஒரு கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. கொரோனா நோயும் வாழ்வியலும் என்ற கட்டுரை, சுவையான தகவல்களை குறிப்பிடுகிறது.
மருத்துவத்தின் பல வகைகளை, கொங்கு வட்டார நாட்டு மருத்துவம் என்ற கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. அகப்புற மருத்துவம் ஒரு வித்தியாசமான கட்டுரை. அனைவரும் பயன் கொள்ளத்தக்க வகையில் உருவாகி இருக்கும் நுால்.
– ராம.குருநாதன்