தமிழில் உயிர், மெய் எழுத்துகளை அறிமுகப்படுத்தும் நுால். எழுத்துகளைக் கொண்டு சொற்கள் அமையும் முறை, ஒலிப்புப் பயிற்சியை அறிமுகம் செய்கிறது. உயிர் எழுத்துகளைப் புதுமையான முறையில் சொற்களுடன் அறிமுகம் செய்கிறது. மெய்யெழுத்துகளை 18 சொற்களுடன் இணைத்து கற்றுத் தருகிறது. மெய்யெழுத்துகளை வாசித்துப் பழக, சொற்களின் பட்டியல் தரப்பட்டு உள்ளது. உயிர் எழுத்துகளை கவிதை வடிவில் எளிமையாக விளக்குகிறது.
ஆத்திசூடியின் வழியாகவும் விளக்கம் பெறுகின்றன. வழக்கத்தில் உள்ள தமிழ் கிரந்த எழுத்துகளைச் சொற்களுடன் அறிமுகம் செய்கிறது. ஸரஸ்வதி, ஹஹரி போன்ற சொற்கள் எடுத்துக்காட்டு தந்து விளக்கப்பட்டுள்ளன.
நிறைவில் நுாலை வெளியிட்டுள்ள அறக்கட்டளை செய்து வரும் தர்ம காரியங்கள் பற்றி விளக்கப் பட்டுள்ளது. குறிப்பாக முதியோர் இல்லம், அனாதை பிரேத ஸம்ஸ்காரம் போன்ற பயனுள்ள தகவல்கள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே எளிதில் ஆரம்ப தமிழ் கற்றுக் கொள்ள பெரிதும் உதவும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்