ஸ்ரீபராசர பட்டரின் சீடரான, ஸ்ரீகூர நாராயண ஜீயர் எழுதிய, ஸுதர்சன சதகத்திற்கு தெளிவான விளக்கங்கள் தந்துள்ள நுால். ஆபத்துகள் விலக, அழியாத செல்வம் பெற, பாவங்கள் அகல, புகழ் அடைய, விரோதிகள் அழிய, சோம்பேறித்தனம் அகல, துக்கங்கள் நீங்க, தீமைகள் அகல, பொறாமைக் குணம் அகல, நோய்கள் நீங்க, நல்ல புத்தி ஏற்பட, வெற்றிகள் அடைய என்று பல சுலோகங்களில் கூறப்பட்ட கருத்துகளுக்கு விளக்கவுரை தரப்பட்டுள்ளது. சுலோகங்களை வடமொழியிலும், தமிழ் எழுத்துகளிலும் தந்துள்ளனர். ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருளும், கருத்துரையும் தரப்பட்டுள்ளன.
வட சொற்களுக்குரிய தமிழ் சொற்களையும் கூறிப் பொருள் விளக்குவது சிறப்பு. கருத்துரையை மணிப்பிரவாளத்தில் கூறியுள்ளது படிப்போருக்கு உதவும். ‘சதகம்’ என்பதற்கான இலக்கண விதிப்படி, 100 சுலோகங்களில், திருமாலின் சுதர்சன சக்கரத்தின் பெருமையை கூறுகின்றன. திருமால் அடியார்களுக்கு மிகவும் உதவும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து