புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர், சிந்தனையாளர் லியோ டால்ஸ்டாயின் நான்கு சிறுகதைகளின் தமிழாக்க புத்தகம். கதைகளில் அன்பும், மனித நேயமும் ஓங்கி நிற்கிறது. ஜெருசலம் புனிதப்பயணம் மேற்கொள்ள தயாராகும் நண்பர்களின் கதை, எது இறைபக்தி, எது இறைவனுக்கு பிடித்த செயல் என்பதை அழகாக விவரிக்கிறது.
பயணத்தின் பாதியில் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்லும் பெண், அங்குள்ளோர் நிலை கண்டு கலங்குகிறார். அவர்களின் உயிர் காத்து, பணிவிடை செய்து, அந்தக் குடும்பத்தை மீண்டெழ வைக்கிறார். எளிய மனிதர்கள் மீது அக்கறை கொள்வதும் பக்தியின் வெளிப்பாடு தான் என்பதை உணர்த்துகிறது. கொடுங்குளிரை சமாளிக்க கம்பளியைத் தயாரிக்க நினைக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி, அதற்கான தொகையை சிறுக சிறுக சேமிக்கிறார். அந்த நேரத்தில் ஒரு வழிப்போக்கனுக்கு உதவுகிறார். இதனால் ஏற்படும் குடும்பச் சச்சரவுகளை அமைதியாய் கடக்கையில், அற்புதம் நிகழத் துவங்குகிறது. அன்பின் வழியது தான் உயிர் என உணர்த்துகிறது.
– சையத் அலி