பக்தி இயக்கத்தில் முன்னோடியாக திகழ்ந்த ஆழ்வார்கள் மற்றும் அவர் உருவாக்கிய பக்தி இலக்கிய படைப்பு பற்றியும் வியந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
ஆழ்வார்களின் தமிழ் நடை மீதான ஈடுபாட்டை, இலக்கிய நயத்துடன் வெளிப்படுத்துகிறது.
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டர் அடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் என வாழ்க்கை சுருக்கமும், படைப்புகளில் முகிழ்க்கும் தமிழ் மொழிச் சுவை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. கனிந்துருகி உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ராம்