கடவுளை நேரில் காட்டுவது போல் ஞானக் கண்ணைத் திறக்கும் நுால். கடந்தும், உள்ளேயும் நிற்கும் கடவுள் பொருள் பற்றி பல கோணங்களில் காட்டப்பட்டுள்ளது. மனிதனின் முதல் சிந்தனையே ஆன்மிகம் என்பதற்கு, சிந்துவெளி பகுதி நாகரிகம் ஆதாரமாக உள்ளது.
தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ படைப்புகளில் சான்றுகள் உள்ளன. மகாவீரர், புத்தர், ஏசு பிரான், கன்பூசியஸ், நபிகள், குருநானக் போன்ற தத்துவ ஞானியர் கூறும் கடவுள் சிந்தனை காட்டப்பட்டுள்ளது.
சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, பெர்னாட்ஷா, இங்கர்சால் போன்ற பகுத்தறிவு அறிஞர்கள் பார்வையும் முன்வைக்கப்பட்டுள்ளது. பக்தி இயக்கம் உருவாக்கிய ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வள்ளலார் போன்ற ஞானியரின் போதனைகளும் தரப்பட்டுள்ளன. அவை எளிதாக புரியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுளை மனதில் காண வைக்கும் கருத்துப் புதையல்.
– முனைவர் மா.கி.ரமணன்