திரையிசைப் பாடல்களை மருத்துவத்துக்கு பயன்படுத்துவது பற்றி அலசியுள்ள நுால். ஐந்து பாகங்களாக உள்ளது. திரை இசையும் இசை சிகிச்சையும், நரம்பு இசையியல் அறிதிறன் கூறுகள், தமிழ் திரை இசையின் வரலாறு, நரம்பு இசையியல் கண்ணோட்டத்தில் சுசிலாவும், இளையராஜாவும், திரையிசையும் ஆன்மிகமும் என்ற தலைப்புகளில் விளக்கப்பட்டு உள்ளது.
பின்னிணைப்பில் இசை சிகிச்சை முறையை விளக்கியுரைக்கிறது. எளிமையான மொழிநடையும், தரமான வடிவமைப்பும் பொலிவை காட்டுகிறது. தேவையான இடங்களில் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கருத்துகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
திரையிசையைப் பொழுதுபோக்கு என்ற நிலையைக் கடந்து, மருத்துவத் துறையுடன் இணைத்துள்ள முயற்சி வரவேற்புக்கு உரியது.
– முகிலை ராசபாண்டியன்