ஆங்கிலேய ஆட்சியில் மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த தாமஸ் மன்றோவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விவரிக்கும் நுால். வரலாற்று ஆவணங்கள், கடிதங்கள் துணையுடன் எழுதப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மன்றோவின் சிந்தனை மற்றும் செயல் முறையை விவரிக்கிறது. கடிதம் ஒன்றில், ‘எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும், பள்ளிகளைத் திறந்தாலும், இந்தியர்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல், அதிகாரம் வழங்காமல் ஒதுக்கி வைத்தால் அவர்களின் வாழ்வுநிலை உயராது’ என்று, ஆங்கிலேய ஆட்சி தலைமையிடம் குறிப்பிட்டுள்ளார்.
அவரது செயல் கம்பீரமாக வாழ்க்கை நிகழ்வுகளில் தெரிகிறது; சமூகத்தை உற்று கவனித்திருக்கும் நேர்மை வியப்பு தருகிறது. ராணுவத்தில் சேர்ந்து, கவர்னராக உயர்ந்து, பொறுப்புகளை ஈடுபாட்டுடன் நிறைவேற்றிய சம்பவங்கள் பல உள்ளன. தென் மாநில வளர்ச்சி வரலாற்றில் மன்றோவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நுால்.
– மலர்