தேச விடுதலைக்காக முழக்கமிட்ட பாரதியார், கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த கதையாசிரியர் என்பதை நிரூபிக்கும் நுால்.
மொத்தம் 34 கதைகள் உள்ளன. ‘மழை’ கதையில், பாரதியாரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. ‘பேய்க்கூட்டம்’ கதை அச்சத்தை விலக்குகிறது. சமூக பார்வையுடன் பகுப்பாய்வாக பேசுகிறது. வேடிக்கையாக இருந்தாலும், சிந்தனையை துாண்டுகிறது. சில கதைகள் பாடல் விளக்கத்துடன் முடிகின்றன. – டி.எஸ்.ராயன்