வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் பண்பை உயர்த்தும் என்னும், உயரிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘எறியப்படும் கற்களை வைத்து, நீ மேலே ஏறிச் செல்; இது தான் வாழ்க்கையின் பாடம்’ என சுவாமி சின்மயானந்தர் கூறுவது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு பகவானிடத்தில் சரணாகதி அடைந்து, கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது. முக்தி என்பது பரமபத வாசல் அடைவது அல்ல; இருக்கும் இடத்தில் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருப்பதே.
நேர மேலாண்மை, குருவின் கடமை, கோமாதாவின் மகிமை, குருவாயூரப்பனின் லீலை போன்றவையும் சொல்லப்பட்டு உள்ளன. இவை, வாழ்வை செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகளாகும். இதையே உணர்த்துகிறது நுால்.
–
புலவர் சு.மதியழகன்