மனித வாழ்வுடன் பிணைப்பு கொண்டுள்ள விலங்கான மாடு பற்றிய விபர நுால். ஆநிரை என்ற முதல் இயல், மனித இனத்துடன் மாடுகள் கொண்டுள்ள தொடர்பு குறித்து வரலாற்று தகவல்களை தருகிறது. இந்தியா முழுதும் மாடு இனங்கள் பற்றிய செய்தியை சொல்கிறது. அவற்றின் பயன்பாடு குறித்தும் கூறப்பட்டு உள்ளது.
உலகில் உள்ள மாடு இனங்கள், அவற்றின் பயன்பாடு பற்றியும், காளை சார்ந்த போட்டிகள் மற்றும் ஜல்லிக்கட்டு விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நந்தி வழிபாடு பற்றிய தகவல்கள் உள்ளன. பசு மாட்டின் பயன்பாடு, பால் உற்பத்தி, பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி என விரிவான தகவல்களும் உள்ளன. சாணப் பயன்பாடு பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கல், மாடு பராமரிப்பு, தீவன வகைகள், மாட்டிறைச்சி உணவு, மாடு சார்ந்த உற்பத்தியின் பயன்பாடு என விபரங்கள் உள்ளன. மனித வாழ்வில் அங்கமாக திகழும் மாடு பற்றிய தகவல் கொண்ட நுால்.
–
ஒளி