இலக்கிய விழுமியங்களை இரட்டைக் காப்பியங்கள் வழி ஆராயும் நுால். முதல் இயல், விழுமியங்களின் பொது நிலையை பண்டை இலக்கியம் வழி அறிமுகப்படுத்துகிறது. அடுத்து, இரட்டைக் காப்பியங்களில் சமயநிலை, சமூகநிலை, கதை மாந்தர் விழுமியங்கள் போன்ற தலைப்புகளில் ஆராய்கிறது.
சமண சமய தத்துவங்களை எளிமையாக விளக்குகிறது. பவுத்த சமய அறக்கருத்துகளை ஆராய்கிறது. தாமரை மலர் வாழ்க்கைத் தத்துவத்திற்கு உடன்பாடாக இருப்பதை அழகாக விளக்கியுள்ளது. சமயங்கள் செல்வாக்கை நிலைநாட்டிய போது நடந்த போராட்டங்களை குறிப்பிட்டுள்ளது.
சமூக விழுமியம் பற்றிய கருத்தாக்கத்தில், மனிதன் கூட தெய்வமாகலாம் என்ற சிறப்பு சமண சமயத்தில் மட்டுமே இருக்கிறது என்பதை உணர்த்தியிருப்பது சிந்திக்கத்தக்கது. ஆசிரியரின் அரிய முயற்சி பாராட்டுக்குரியது.
–
ராம.குருநாதன்