புதிய தேசிய கல்விக் கொள்கை, குறுந்தொழில்கள், பாரதத்தின் இயற்கை வளம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இந்திய சித்த மருத்துவம், விண்வெளி ஆய்வின் மைல்கல், அரசியலமைப்பில் தேவையான மாற்றங்கள் போன்ற 21 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
தேசிய கல்விக் கொள்கை – 2020, ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில் தகுதியைத் தவிர எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என வரவேற்க வேண்டிய அம்சங்கள் பலவற்றை நிரல்படுத்துகிறது. அதில் உள்ள குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பெரிய தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்களை வழங்குவதோடு, பல கோடி பேருக்கு சுய வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறுந்தொழில்களின் இன்றியமையாமை பற்றி விவரிக்கிறது. ஓட்டுரிமம் பெறுவதற்கு விதிகளும், கட்டுப்பாடுகளும், ஒழுங்கு முறைகளும் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
விண்வெளி ஆய்வின் தந்தை விக்ரம் சாராபாய் விதைத்த விதையின் விருட்சங்களே, ரோகிணி, சந்திரயான், மங்கள்யான் என விண்வெளி ஆய்வுப் பெருமையைப் பறைசாற்றுகிறது. வாகன விபத்துகளை தவிர்க்க சிறந்த ஆலோசனைகளையும் வழங்குகிறது. அரிய கருத்து கருவூலமாக விளங்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்