குடும்பம், நட்பு, இரக்கம், ஆன்மிகம், நாட்டுப்பற்று, தியாகத் தலைவர்கள் என சமூக நடப்புகளை அலசும் கவிதை தொகுப்பு நுால்.
ஏழையின் சுமைகளை இறக்கி வைத்த காமராஜரின் செயல்பாடுகளை பேசுகிறது. கக்கனின் எளிமை, இன்றைய தலைவர்களுக்கு வேண்டும் என்கிறது. அப்துல் கலாமின் அருஞ்சொற்களை கூறி, இளைஞர்களை விழிப்படையச் செய்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூக அக்கறையை எடுத்துரைக்கிறது.
நடிகர் சிவாஜியின் நடிப்பு முக பாவனையை காட்டுகிறது. பாடகர் எஸ்.பி.பி.,யின் குரலை சுவாசிக்க வைக்கிறது. காமராஜர், அண்ணாதுரையின் கருத்தியல், பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு, மகளிர் தின சிறப்புகள், சிறிய கட்டுரையாக தொகுக்கப்பட்டுள்ளன. கவிதை, கட்டுரை எளிய மொழி நடையில் உள்ளது.
– டி.எஸ்.ராயன்